ரூ.1248.24 கோடியில் சாலைகள், மேம்பாலம் திறப்பு
சென்னை: ஈரோடு மாவட்டத்தில் 272.53 கோடியில் 30.60 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட கோபி - ஈரோடு சாலை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 221. 4 கோடியில் 10 மீ அகல இருவழிச்சாலையாக 16.425 கி.மீ தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 2 ரயில் கடவுகளுக்கு மாற்றாக கட்டப்பட்ட சாலை மேம்பாலம் உள்பட ரூ.1248.24 கோடியில் 10 சாலைகள், 2 சாலை மேம்பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
Advertisement
Advertisement