ரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாதில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த முகமது யூசுப் அலி என்பவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர். அவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு இந்தியர் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகவலை சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளது. அதில், ‘‘ரியாக் விமான நிலையத் தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த மற்றொரு இந்தியரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
+
Advertisement


