புதுடெல்லி: மக்களவையில் ஜல் சக்தி அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய ஜல் சக்தி துறை அமைச்சர் சிஆர் படேல், ‘‘ஒன்றோடொன்று இணைப்பதற்காக 30 ஆறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 11 ஆறுகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் ஒரு மாநில பொறுப்பு என்பதால் மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை ஒன்றிய அரசால் முன்னேற முடியாது. லட்சிய ஜல் ஜீவன் மிஷனை செயல்படுத்துவதில் காணப்படும் முரண்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் பிறர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


