Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

முட்டை விலை உயர்வு: 8 ரூபாய் ஆனது

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. தினமும் சுமார் 7.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், நாமக்கல்லில் இருந்து தினமும் லாரிகளில் முட்டை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைக்கு, என்இசிசி என்ற அமைப்பு தினமும் விலை நிர்ணயம் செய்து வருகிறது. முட்டை விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 16ம் தேதி முட்டை விலை 645 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும்.

இந்நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 650 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதன் மூலம் முட்டை விலை இந்த ஆண்டில் 2வது முறையாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லரை கடைகளில் ஒருமுட்டை ரூ.8 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.