கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் ‘ரிக்கர்’ பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணி: ரிக்கர் (Rigger). 40 இடங்கள் (பொது-16, ஒபிசி-13, எஸ்சி-7, பொருளாதார பிற்பட்டோர்-4). வயது: 18 லிருந்து 28க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
உதவித் தொகை: முதல் ஆண்டு ரூ.11 ஆயிரம்.
2ம் வருடம் ரூ.12 ஆயிரம்.
பயிற்சிக்கு பின் சம்பளம்:
முதல் ஆண்டு: ரூ.22,100. 2ம் ஆண்டு ரூ.22,800.
மூன்றாம் ஆண்டு ரூ.23,400.
தகுதி: குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி, மருத்துவ தகுதி, சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2026.



