தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரிவர்ஸ் ஸ்விங்கை ஜாகீர் கானிடமிருந்து கற்றுக்கொண்டேன்: இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்

Advertisement

டெல்லி: ரிவர்ஸ் ஸ்விங் உட்பட வேகப்பந்து வீச்சின் சில நுணுக்கங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கானிடமிருந்து, தான் கற்றுக்கொண்டதாக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 980க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற மைல்கல்லை ஜேம்ஸ் ஆண்டர்சன் அடைய உள்ளார். மார்ச் 7ம் தேதி தொடங்க இந்திய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 698 விக்கெட்டுகளை வீழ்த்தி 3வது இடத்தில் உள்ளார்.800 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே 2வது இடத்திலும் உள்ளனர்.

இந்நிலையில் ரிவர்ஸ் ஸ்விங் உட்பட வேகப்பந்து வீச்சின் சில நுட்பங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கானிடமிருந்து, தான் கற்றுக்கொண்டதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். "என்னைப் பொறுத்தவரை, ஜாகீர் கான் நான் நிறைய பார்த்து கற்றுக் கொள்ள முயற்சி செய்தேன். அவர் எப்படி ரிவர்ஸ் ஸ்விங்கைப் பயன்படுத்தினார்.

அவர் பந்துவீசும்போது, எவ்வாறு பந்தை பிடிக்கிறார் என்பது போன்ற பந்துவீச்சு நுணுக்கங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். அதை நான் பின்பற்ற முயற்சி செய்தேன்" என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

Advertisement