தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் வகையில் ஐபிஎல் தொடரில் பந்தில் எச்சில் தடவ அனுமதி?

Advertisement

மும்பை: 10 அணிகள் பங்கேற்கும் 18வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் கேகேஆர்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் இன்று 10 அணி கேப்டன்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் அணிகளின் மேலாளர்களும் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் ஐபிஎல் விதிமுறைகள் குறித்து கேப்டன்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் பவுலர்கள் பந்தில் எச்சில் தடவக்கூடாது என்ற விதிமுறையை நீக்குவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்க்கும்போது ஒரு புறம் அது லேசாக தேய்ந்து போகும். அப்போது பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். கொரோனாவின் போது விதிக்கப்பட்ட எச்சிலைப் பயன்படுத்தக் கூடாது என விதிக்கப்பட்ட இந்த விதியால் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே அழிந்து வருகிறது. இந்த நிலையில்தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் மன்னனான முகமது ஷமி இந்தக் கோரிக்கையை வைத்திருந்தார்.

எனவே, இந்த தடையை நடப்பு ஐபிஎல் தொடரில் நீக்குவதற்கான முயற்சியை எடுக்க உள்ளது. முதல் கட்டமாக இன்று நடக்க உள்ள பத்து அணிகளின் ஐபிஎல் கேப்டன்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான அணிகளின் கேப்டன்கள் இதற்கு ஆதரவாக பேசினால் இந்தத் தடையை நடப்பு ஐபிஎல் தொடரிலேயே நீக்க பிசிசிஐ முயற்சி செய்யும்.

Advertisement