Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்: முதலமைச்சர் விஜய்

சென்னை: இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; சமூகநீதியின் முன்னோடியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் திகழ்ந்த திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையையும் புகழ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.

கல்வி, சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக அவர் ஏற்றிய ஒளிவிளக்கு, தலைமுறைகளைக் கடந்து நம்மை வழிநடத்தும் நிலையான பேரொளியாகத் திகழ்கிறது.

அவரது உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்!" என தெரிவித்துள்ளார்.