Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

38 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: இயற்கை சீற்றம், நோய்த்தொற்று மற்றும் பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளில் மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து, விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து அரசு கண்காணித்து வருகிறது.

இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர்களை இப்பணியில் ஈடுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி அமைச்சர்கள், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக செய்யப்படுகின்றனர். அது வருமாறு:

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் மயிலாடுதுறைக்கும், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் குமார் திருவள்ளூருக்கும், நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் நெல்லைக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பெரம்பலூருக்கும்,

வெளிநாடு வாழ் தமிழ்நாடு நலத்துறை அமைச்சர் தென்னரசு காஞ்சிபுரத்திற்கும், வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் திருப்பத்தூருக்கும், மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் செங்கல்பட்டுக்கும், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கள்ளக்குறிச்சிக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ராணிப்பேட்டைக்கும், வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜ்குமார் தர்மபுரி மற்றும் அரியலூருக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நாகப்பட்டினத்துக்கும், வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் தஞ்சாவருக்கும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சிக்கும், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி கரூருக்கும், வணிக வரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் நாமக்கல், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், திருப்பூருக்கும், கால்நடைத்துறை அமைச்சர் கமலி நீலகிரிக்கும், கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி வேலூருக்கும், வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டுக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கோவைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எரிசக்தித்துறை அமைச்சர் நிர்மல்குமார் மதுரை மற்றும் தேனிக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் புதுக்கோட்டைக்கும், இயற்கை வளங்கள்துறை அமைச்சர் பிரபு சிவகங்கைக்கும், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கிருஷ்ணகிரிக்கும், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி விருதுநகருக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் திருவாரூருக்கும், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தூத்துக்குடிக்கும்,

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன்ராஜா ராமநாதபுரத்துக்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சேலத்திற்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கன்னியாகுமரிக்கும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராஜேஷ் தென்காசிக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் திண்டுக்கல்லுக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.