Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாஜவை வலுப்படுத்த ராஜினாமா செய்தேன்; எனக்கு எதிராக அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்: எல்.முருகன் எச்சரிக்கை

சென்னை: முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:

நான் கடந்த 13ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும், மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பதவியிலிருந்தும் விலக பிரதமரிடம் அனுமதி கோரி, அவரின் அனுமதி பெற்றதும் எனது ராஜினாமாவைச் சமர்ப்பித்தேன். எனது ராஜினாமாவின் ஒரே நோக்கம், 2029 ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக, அடிமட்டத்திலிருந்து தொடங்கி கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்தி, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும்.

கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மேம்படுத்தும் நோக்கில் நான் மேற்கொண்டுள்ள தற்போதைய பொறுப்பை ஏற்றுக்கொள்ள இயலாத சிலர், டிஜிட்டல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வாயிலாகத் தேவையற்ற மற்றும் இழிவான கருத்துகளை தெரிவித்து அவற்றைப் பரப்பி வருகின்றனர். இது எவ்வித ஆதாரமும் அற்றவை. என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பவை.

எனது ராஜினாமா தொடர்பாக டிஜிட்டல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து உள்ளடக்கங்கள், பதிவுகள் மற்றும் பிரசுரங்களையும் உடனடியாக நீக்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதற்காகப் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோருமாறும் கேட்டுக்கொள்கிறேன். இதனைச் செய்யத் தவறினால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக, அவரவர் சொந்தச் செலவில், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.