குடியிருப்புகளுக்கு அருகில் விவசாய நிலத்தில் மின்வேலி அமைப்பு: கிராம மக்கள் எதிர்ப்பு
Advertisement
இக்கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு தனியார் மின்வேலி அமைப்பதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், மக்களின் எதிர்ப்பை நில உரிமையாளர் பாஸ்கரன் அலட்சியப்படுத்தி வருகிறார். இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர், அந்நிலத்தின் உரிமையாளர் பேட்டரி மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி வேலி அமைத்துள்ளதாக தெரிவித்தார். எனினும், அந்நிலத்தின் வழியே செல்லும் கோழி, ஆடு, மாடு உள்பட பல்வேறு கால்நடைகள் மின்வேலியில் சிக்கி இறக்கின்றன. மேலும், அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மின்வேலி அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, மின்வேலியை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Advertisement