ரிசர்வ் வங்கியில் மாற்ற கொடுத்த ரூ.40 ஆயிரத்துடன் 2 பேர் ஓட்டம்: கமிஷன் ஏஜென்ட் போலீசில் புகார்
Advertisement
இதையடுத்து, குணவழகன் தலைமையில் வந்த 15 பேரிடம் தலா 20,000 ரூபாய் என மொத்தம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து, பணத்தை மாற்றி வருமாறு பாபு, ரிசர்வ் வங்கி உள்ளே அனுப்பி வைத்தார். 13 பேர் மட்டுமே கொடுத்த பணத்தை மாற்றி பாபுவிடம் ஒப்படைத்தனர். இதில் தீதிஸ், விஜய் ஆகிய இருவர் தலா 20,000 ரூபாயுடன் மாயமாகினர். இதுதொடர்பாக கோட்டை காவல் நிலையத்தில் பாபு புகார் அளித்தார். ஆட்களை அழைத்து வந்த ஏஜென்ட் குணவழகனை பிடித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணத்துடன் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
Advertisement