இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள சட்ட அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. சட்ட அதிகாரி- கிரேடு- பி: 6 இடங்கள். வயது: 21 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.78,450. தகுதி: சட்டப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு 50% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. மேனேஜர்
i) டெக்னிக்கல்- சிவில்: 2 இடங்கள்.
ii) டெக்னிக்கல்- எலக்ட்ரிக்கல்: 1 இடம்.
வயது வரம்பு: 21 லிருந்து 35க்குள். சம்பளம்: ரூ.78,450. தகுதி: சிவில் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் 60% மதிப்பெண்கள் பெற்று இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. உதவி மேலாளர் (ராஜ்பாஷா): 4 இடங்கள். வயது: 21 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.62,500. தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன், இந்தியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிெபயர்ப்பு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.600/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
https://opportunities.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (26.02.2026).
