பணி: அசிஸ்டென்ட்டுகள். மொத்த காலியிடங்கள்: 650.
சம்பளம்: ரூ.29,000- ரூ.78,640.
வயது: 01.02.2026 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்று ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு முதல்நிலை தேர்வு (பிரிலிமினரி). பிரதான தேர்வு (மெயின்) ஆகிய இரு கட்டங்களாக நடைபெறும்.
முதல்நிலை தேர்வு (பிரிலிமினரி) தமிழ்நாட்டில் திருப்பூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, நாகர்கோவில், ஈரோடு, சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய மையங்களில் ஏப்.11ம் தேதி நடைபெறும்.
2ம் கட்ட பிரதான தேர்வு (மெயின்) தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், மதுரை, சேலம் ஆகிய மையங்களில் ஜூன் 7ம் தேதி நடைபெறும்.
கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.450/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.50/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.03.2026.
