Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல: ஆவின் நிர்வாகம் விளக்கம்!!

சென்னை: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று ஆவின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதில் லிட்டருக்கு ரூ.4 ஆவின் நிர்வாகத்திற்கும், ரூ.1 பால் விற்பனையகங்களுக்கும் (பாலகங்கள்) வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் அண்மையில் ஆவின் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டது. ஆவின் நிறுவனம் ஏற்கனவே கடுமையான இழப்பை சந்தித்து வரும் நிலையில், கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், இழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும், நிலைமையை சமாளிப்பதற்கு ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆவின் நிறுவனம் பரிந்துரை அனுப்பியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், அடுத்த சில நாள்களில் ஆவின் நிறுவன பால் விலை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று ஆவின் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக நாளிதழில் வெளியான செய்தி தொடர்பாக, ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுவது: ஆவின் நிறுவனம் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தரமான பால் மற்றும் பால் பொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது.

பால் உற்பத்தியாளர்களின் நலன், பால் கொள்முதல் விலை மற்றும் நுகர்வோரின் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஆவின் செயல்பட்டு வருகிறது. பால் விலை உயர்வு தொடர்பாக நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தவறான செய்தி. எனவே பொதுமக்கள் இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.