Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரெனால்ட் டஸ்டர்

ரெனால்ட் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட 3வது தலைமுறை டஸ்டர் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், இந்த நிறுவனம் இந்தியச் சந்தையில் மீண்டும் கால் பதித்துள்ளது. இதிலுள்ள டர்போ டிசிஇ 160 இன்ஜின், அதிகபட்சமாக 163 பிஎஸ் பவரையும் 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்திய சாலைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட 6-ஸ்பீடு வெட்-கிளட்ச் டிசிடி அலல்து 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கும். இதில் ஆதென்டிக், எவல்யூஷன், டெக்னோ, டெக்னோ பிளஸ் மற்றும் ஐகானிக் ஆகிய 5 வேரியண்ட்கள் உள்ளன.

இதன் முக்கிய அம்சங்களாக எல்இடி விளக்குகள், கூகுள் வசதியுடன் கூடிய ஓபன் ஆர் லிங்க் மல்டிமீடியா, பனோரமிக் சன்ரூப் மற்றும் எலக்ட்ரிக் பவர் டெயில்கேட், காற்றோட்ட வசதியுள்ள முன்பக்க இருக்கைகள், டூயல்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 17 அடாஸ் அம்சங்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. 7 ஆண்டுகால உத்தரவாதம் வழங்கப்படுகிறது. எக்கோ எல்இடி ஹெட்லாம்ப்கள், எல்இடி டெயில் லாம்ப்கள், 7 அங்குல டிஎப்டி டிரைவர் டிஸ்பிளே, ஆட்டோ ஹெட்லாம்ப், ரியர் ஏசி வெண்ட்கள், கீலெஸ் என்ட்ரி, 6 ஏர்பேக் உள்ளிட்ட 35 வகையான பாதுகாப்பு அம்சங்கள், ரியர் வியூ கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. வேரியண்ட்களுக்கு ஏற்ப இவை மாறுபடும். டெக்னோ பிளஸ்-ல் 10.25 அங்குல டிஎப்டி டிரைவர் டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. பிளைண்ட் ஸ்பாட் எச்சரிக்கை அமைப்பு உள்ளது. ஐகானிக் வேரியண்டில் 360 டிகிரி 3டி கேமரா, மழை வந்தால் தானாக இயங்கும் வைபர்கள், பிஎம் 2.5 பில்டர் மற்றும் காற்றின் தூய்மை எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வசதி இடம் பெற்றுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். அறிமுகச் சலுகையுடன் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.10.29 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதென்டிக் ஷோரூம் விலை சுமார் 10.49 லட்சம். டாப் வேரியண்டான டெக்னோ சுமார் ரூ.13.49 லட்சம். 1.3 லிட்டர் வேரியண்டில் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.12.99 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.16.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.