Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மகாத்மாகாந்தி பெயர் நீக்கத்துக்கு கண்டனம் விபி ஜிராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு எதிராக கர்நாடக பேரவையில் தீர்மானம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை நேற்று கூடியதும் முதல்வர் சித்தராமையா எழுந்து ‘தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை விபி ஜிராம் ஜி என பெயர் மாற்றி ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை எதிர்த்து தீர்மானம் தாக்கல் செய்து பேசுகையில், ‘கர்நாடக ஊரக மக்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி விபிஜிராம்ஜி என புதிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது கூட்டாட்சி கொள்கைக்கு எதிரானது.

மேலும் மாநில அரசுகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. கிராம பஞ்சாயத்துகளின் உரிமையை பறிக்கும் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்’ என பேசினார். முதல்வர் சித்தராமையாவின் இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜ உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து சபாநாயகர் யு.டி.காதர் அவையை பிற்பகல் 3.45க்கு ஒத்திவைத்தார். இந்த தீர்மானம் விவாதத்துக்கு பின்னர்சட்டப்பேரவையில் இன்று நிைறவேற்றப்பட உள்ளது.