Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

முன்னெப்போதையும் விட இந்தியாவுடனான உறவு முக்கியமானதாக மாறியுள்ளது: ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் பெருமிதம்

கான்பெரா: இ பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அடுத்த வாரம் மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஜூலை 6ம் தேதி இந்தோனேஷியாவில் தொடங்கி ஜூலை 11ம் தேதி நியூசிலாந்தில் முடிவடையும் மூன்று நாடுகளுக்கான பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் மோடி 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஆஸ்திரேலியா செல்கிறார்.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘எங்களது வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக எனது நண்பரான பிரதமர் மோடியை ஆஸ்திரேலியாவிற்கு வரவேற்பதில் நான் பெருமை கொள்கிறேன். ஆஸ்திரேலியா-இந்தியா உறவானது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானது. மேலும் எங்களது கூட்டாண்மையானது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை வளர்க்கிறது. எங்கள் உறவு விரிவான மூலோபாயக் கூட்டாண்மையை அடிப்படையாக கொண்டது. ஆழமான பொருளாதார மற்றும் கலாச்சார தொடர்புகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.