தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரீல்ஸ் கேமராமேன் ஸ்பாட்டுக்கு வந்த பிறகே நிகழ்ச்சியை தொடங்கும் விசில் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தலைநகரில் குறிப்பிட்ட காக்கி நிலைய பகுதியில் மீண்டும் போதைப் பொருட்களின் நடமாட்டம் சக்கப்போடு போடுதாமே..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

Advertisement

‘‘தலைநகரில் தோப்பு என முடியும் காக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயை இணைக்கும் பகுதியில் உள்ள சென்னையின் வடபகுதியில் உள்ள முக்கிய காவல் நிலையம் பி4 செயல்படுது... இந்த பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை எப்பொழுதும் கொடி கட்டி பறக்கும்.. கடந்த சில மாதங்களாக விட்டுவிட்டு அவ்வப்போது காக்கி அதிகாரிகள் ரெய்டு நடத்தி கண்ட்ரோலில் வைத்திருந்தாங்க.. ஆனால் கடந்த சில வாரங்களாகவே அனைத்தையும் திறந்து வைத்தது போல கஞ்சா. இரவு நேரங்களில் மற்றும் காலை வேளையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை, குட்கா விற்பனை என அனைத்தும் சக்க போடு போடுகிறதாம்.. சென்னையில் எங்கு சரக்கு கிடைக்கவில்லை என்றாலும் இந்த பகுதிக்கு வந்தால் கண்டிப்பாக சரக்கு கிடைக்கும்னு சிலர் அடித்து சொல்றாங்க.. அந்த வகையில் இதற்காகவே ஆட்டோ டிரைவர்கள் இரவு நேரங்களில் இங்கு வந்து கள்ளச்சந்தையில் மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனராம்.. குறிப்பிட்ட சில குடும்பங்கள் தொடர்ந்து இந்த பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வர்றாங்களாம்.. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிந்தும் அவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் எதையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுறாங்களாம்.. குறிப்பாக இந்த காவல் நிலைய பகுதியில் பெண் ஒருவர் மீது இரண்டு காவல் நிலையங்களில் ரெண்டு கஞ்சா வழக்குகள் இருக்காம்.. அதில் ஒன்று கமர்சியல் கஞ்சா வழக்கு. இரண்டிலும் இதுவரை காக்கிகள் அந்தப் பெண்ணை கைது செய்யவில்லையாம்.. அந்த பெண்ணும் ஜாமீன் கோரவில்லையாம்.. அந்த அளவிற்கு காக்கிகள் தவறு செய்பவர்களுடன் அண்டர்ஸ்டாண்டிங்கில் ஜாலியாக உள்ளார்களாம்.. எத்தனை முறை எச்சரித்தாலும் சம்பந்தப்பட்ட காக்கி நிலைய காக்கிகள் அதை கண்டுகொள்வதே இல்லையாம்.. தவறு செய்பவர்களை கூண்டோடு மாற்றினால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ரீல்ஸ் கேமராமேன் ஸ்பாட்டுக்கு வந்தால்தான் நிகழ்ச்சியையே தொடங்குகிறாராமே விசில் கட்சி எம்எல்ஏ...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி விசில் கட்சி சமஉ., தொகுதிக்குள் பன்ற அட்டகாசம் தாங்கலையாம்.. இவர், எங்கு சென்றாலும், பத்து நிமிடத்துக்கு முன்பாகவே ரீல்ஸ் கேமராமேன்களை ஸ்பார்ட்டுக்கு அனுப்பி விடுகிறாராம்.. ரீல்ஸ் கேமராமேன்களை கண்ணில் பார்த்த பிறகுதான் நிகழ்ச்சியை துவக்குகிறாராம்.. ‘யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே..’ என்பது போல, இவரது ரீல்ஸ் கேமராமேன்கன் முன்கூட்டியே குவிந்து விடுவதால், அடுத்து நிகழ்ச்சி ஆரம்பிக்க போகுது என்பதை உள்ளூர் மக்கள் புரிந்துகொள்கின்றனராம்.. இப்படித்தான் ரீல்ஸ் எடுப்பதற்காக, தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை திறக்காமல் வைத்துள்ளாராம். ‘அமைச்சர் வந்து திறக்க வேண்டும். அப்போது ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்ப வேண்டும்’ என திட்டமிட்டு, எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டியே வைத்துள்ளாராம்.. இதனால், தொகுதி மக்கள், தங்கள் பிரச்னை குறித்து எம்எல்ஏ அலுவலகம் சென்று, மனு அளிக்க முடியாமல் தவிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கிகள் ஆதரவுடன் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடக்குதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடலூரில் பாடின்னு முடியும் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சட்ட விரோதமாக அமோகமாக விற்பனை செய்யப்படுகிறதாம்.. மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டுக்கு அடிமையான ஏழை மக்கள் பலர் தங்கள் அன்றாட வருமானத்தையும், வாழ்நாள் சேமிப்பையும் இழந்து வர்றாங்களாம்.. பலர் தற்கொலை செய்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கு.. பரிசுத்தொகை விழுந்தாலும், முழுமையாக கடைபிடிப்பதில்லையாம்.. வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய அதற்கென்று ஆட்களை நியமனம் செய்து குயில், நல்ல நேரம், ரோசா, என விதவிதமான பெயர்கள் வைத்து வெள்ளை பேப்பரில் கருப்பு வெள்ளையாக பிரிண்ட் செய்து விற்பனை செய்றாங்களாம்... தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட நபர்களை கைது செய்தால் மட்டுமே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஒழிக்க முடியும். லோக்கல் காக்கிகள் ஆதரவுடன் அமோகமாக விற்பனை நடந்து வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் கார் வாங்கி கொடுக்காத கோடீஸ்வர பெண் எம்எல்ஏ மீது அதிருப்தியில் நிர்வாகிகள்’’

‘‘மலைக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி கோடீஸ்வர பெண் எம்எல்ஏ, தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் நிர்வாகிகளுக்கு புதிய கார் வாங்கி தருவதாக ரகசியமாக உத்தரவாதம் கொடுத்து இருக்காங்க.. இதை நம்பிய நிர்வாகிகள், ரிசல்ட் வந்த பிறகு கார் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தாங்களாம்.. ரகசியமாக இருந்து வந்த கார் விஷயம் தற்போது வெளியே தெரியவந்திருக்கு.. இதனால் கார் வேண்டாம்... அதற்கு பதிலாக ‘விட்டமின் ப’ கொடுங்கள் என பெண் எம்எல்ஏவிடம் நிர்வாகிகள் கேட்டு இருக்காங்க.. அதற்கு அவர் எந்த ரியாக்‌ஷனும் இதுவரை காட்ட வில்லையாம்... இதனால் எம்எல்ஏ மீது நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்.. இந்த டாப்பிக் தான் மலைக்கோட்டை மாவட்டம் முழுவதும் இலைகட்சிக்குள்ளே பேசிக்கிறாங்களாம்,,’’... என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement