Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வருகிற 15ம் தேதி முதல் வியாபாரிகளுக்கான சர்க்கரை இருப்பு வரம்பு 2000 குவிண்டாலாக குறைப்பு

புதுடெல்லி: வருகிற 15ம் தேதி முதல் வியாபாரிகள் இருப்பு வைக்கக்கூடிய சர்க்கரை அளவு 2000 குவிண்டலாக குறைக்கப்பட்டுள்ளது. சர்க்கரையின் சில்லறை விற்பனை விலை தொடர்ந்து அதிகமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் ஒன்றிய உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாபாரிகள் இருப்பு வைக்கக்கூடிய சர்க்கரை அளவானது 4000 குவிண்டாலில் இருந்து 2000குவிண்டலாக குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் சர்க்கரை போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், பதுக்கல் மற்றும் ஊக வணிகத்தை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி ஒரு வியாபாரி சர்க்கரையை பெற்ற தேதியில் இருந்து 30 நாட்களுக்கு மேல் அதனை இருப்பு வைத்திருக்கக் கூடாது. மேலும் நாட்டின் எந்த பகுதியிலும் எந்த நேரத்திலும் 2000குவிண்டாலுக்கு மேல் சர்க்கரை இருப்பு வைக்கக்கூடாது. இந்த புதிய வரம்பு செப்டம்பர் 15ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். எனினும் குறிப்பிட்ட சந்தை தேவைகளை கருத்தில் கொண்டு கொல்கத்தா மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பெருநகரப் பகுதிகளுக்கு மட்டும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விதிக்கப்பட்ட 4000குவிண்டால் இருப்பு வைக்கும் வரம்பில் எந்த மாற்றமும் இருக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.