நாகப்பட்டினம்: நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது. இந்நிலையில், சுபம் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் முதன்மை வணிக அலுவலர் சிவராம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த இரண்டரை ஆண்டுகளில், இரண்டு நாடுகளுக்கு இடையே கப்பல் மூலம் 55 ஆயிரத்து 310 பயணிகள் ஆன்மீகம், சுற்றுலா, வணிக ரீதியாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று பண்டிகை கால சலுகையாக சுபம் கப்பல் நிறுவனம் ஒரு வழி பயண கப்பல் போக்குவரத்து கட்டணத்தை ரூ.6,000த்தில் இருந்து ரூ.5,500 ஆக குறைத்துள்ளது. பயணிகள் எடுத்து செல்லும் லக்கேஜின் அளவு 10 கிலோவில் இருந்து 30 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கையில் பேக்கேஜ் எடை 7 கிலோ இலவசமாக எடுத்து செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


