புழல்: சென்னை செங்குன்றம் அடுத்த அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், இலவச குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டது. இதன் துவக்க விழாவுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் நஜி முனீஷா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலைசேரி அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திருமுருகன் கலந்துகொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை திறந்துவைத்து மாணவர்களுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில், தனியார் நிறுவனத்தை சேர்ந்த கல்பனா, சீயான்மேரி, இருதயா செல்வதாஸ், ஜெனிபர், இந்துமதி ஆசிரியர்கள் பவானி, சகிலா பானு, ஷாலினி கலந்துகொண்டனர். முன்னதாக, தனியார் நிறுவனத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



