Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செங்குன்றம் சோதனைசாவடியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

பொன்னேரி: செங்குன்றம் சோதனை சாவடியில் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் உள்ள காவல்நிலையயத்தில் கஞ்சா, குட்கா உள்பட பல்வேறு போதைபொருட்களை கடத்தி வருபவர்கள் அவற்றை பதுக்கிவைத்து விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இணை ஆணையர் சிவகுமார், துணை ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜமீஸ் பாபு தலைமையில் காவலர்கள் ரமேஷ், முத்துகுமரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், செங்குன்றம் காவல் சோதனைசாவடி பகுதியில் செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜமீஸ் பாபு தலைமையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியபோது ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து வந்த வாகனத்தின் மூலமாக சென்னைக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்ற 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 10.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ஊத்துக்கோட்டையை சேர்ந்த ஹரிஷ் (25), செங்குன்றம், காந்தி நகரை சேர்ந்த் சதீஷ் (20) என தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா கடத்திவந்து வீடுகளில் பதுக்கி வைத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனையில் செய்தது தெரியவந்தது.