ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும்: அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை
சென்னை: ஆள்சேர்ப்பு முகவர், பணி வழங்கும் நிறுவனம் குறித்து நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும் என அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறும் மோசடி கும்பலிடம் இளைஞர்கள் மாட்டிக் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்காக கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் மாட்டிக் கொண்ட 83 தமிழர்கள் கடந்தாண்டு மீட்கப்பட்டனர்.


