Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இனி ரூ.189 ரீசார்ஜ் பிளான் கிடையாது..சைலண்டாக விலையை உயர்த்திய AIRTEL.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஏர்டெல் நிறுவனம் மறைமுகமாக செய்த சம்பவம் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் குறைந்த விலை ரூ.189 ரீசார்ஜ் பிளான் தற்போது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் திடீர் அறிவிப்பால் அந்த பிளானை பயன்படுத்திவந்த வாடிக்கையாளர்கள் இனி ரூ.199 பிளானை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளனர். சாதாரண மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மலிவான பிளான்களை எல்லாம் நீக்கிவிட்டு விலை உயர்ந்த பிளான்களை மட்டும் ஏர்டெல் நிறுவனம் வைத்திருந்தது. ரூ.189 ரீசார்ஜ் செய்தால் 1GB DATA அன்லிமிடெட் கால் 300 SMS மற்றும் 21 நாட்கள் வேலிடிட்டி இருந்தது.

இந்த பிளானை தற்போது ஏர்டெல் நிறுவனம் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் இருந்து நீக்கி உள்ளது. இதனால் குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள் அப்போது ரூ.199 பிளானை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.10 கூடுதலாக சேர்த்து ரூ.199 க்கு ரீசார்ஜ் செய்தால் 2GB DATA அன்லிமிடெட் கால் மற்றும் 100SMS தினசரி கிடைக்கும் என ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள். முந்தைய பிளானைவிட 7 நாட்கள் அதிகம் என கூறப்படுகிறது. ஏர்டெல் நிறுவனம் சைலன்ட் ஆக ரூ.189 பிளானை நீக்கிவிட்டு ரூ.199 புதிய பிளானை அறிமுகப்படுத்தி உள்ள சம்பவம் சாதாரண வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.