புதுடெல்லி: இந்தியாவின் உளவுப்படையான ரா அமைப்பு தலைவராக இருப்பவர் பராக் ஜெயின். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது இந்திய ஆயுதப்படைகள் தாக்குதல்களை நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நுணுக்கமான திட்டமிடலுக்குப் பின்னால் உள்ள மூளைகளில் ஒருவராக பராக் ஜெயின் அறியப்படுகிறார். தற்போது டெல்லி செங்கோட்டை மீது நடந்த தாக்குதலை முன்னிட்டு அமைச்சரவை செயலகத்தில் செயலாளர் (பாதுகாப்பு) பராக் ஜெயினுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. புதிய அதிகாரி நியமிக்கப்படும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் அந்த பதவியில் இருப்பார் என்று அரசு தெரிவித்துள்ளது.
+
Advertisement
