சென்னை: குன்றத்தூர் அருகே எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பெற்றோர்கள் அபாய கட்டத்தை தாண்டி, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இருவரும் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பெற்றோர் சுயநினைவின்றி இருந்த நிலையில், தற்போது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Advertisement


