ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாக பரப்பப்படும் தகவல் வதந்தி
04:47 PM Jan 25, 2025 IST
Share
Advertisement
சென்னை: ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாக பரப்பப்படும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியால் பருப்பு, பாமாயில் விநியோகத்தை நிறுத்த அரசு முடிவு என வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. தற்போது வரை ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் நடைபெற்றே வருகிறது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.