ரேஞ்ச்ரோவர் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 4.4 லிட்டர் டிவின் டர்போ வி8 பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 635 பிஎஸ் பவரையும், 750 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. 3.8 நொடிகளில் 100 கிலோ மீட்டரை எட்டும்.
இந்த சொகுசு காரில் பனோரமிக் சன்ரூப், 29 ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் சிக்னேச்சர் சவுண்ட் சிஸ்டம், 13 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 13.7 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, இரட்டை மண்டல கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர், மோட்டார் மூலம் சீட்டை விரும்பிய வண்ணம் சாய்த்துக் கொள்ளக் கூடிய, ஹீட் மற்றும் காற்றோட்ட வசதி கொண்ட முன்புற சீட்கள், ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி கண்ட்ரோல், டயரில் காற்று அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு, லெவல் 2 அடாஸ், எலெக்ட்ரானிக் பிரேக், முன்பற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 2 வேரியண்ட்கள் உள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்போர்ட் எஸ்வி ஷோரூம் விலை சுமார் ரூ.2.05 கோடி. ஸ்போர்ட் எஸ்வி எடிஷன் டூ ஷோரூம் விலை சுமார் ரூ.2.35 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


