ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய ஸ்போர்ட் ஆட்டோ பயோகிராபி காரை அறிமுகம் செய்துள்ளது. இது 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வேரியண்ட்களில் கிடைக்கும். அதிக திறன் கொண்ட 4.4 லிட்டர் வி8 இன்ஜின் வேரியண்டும் உள்ளது. 3.0 லிட்டர் இன்ஜின்களில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 351 எச்பி பவரையும் 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5.8 நொடிகளில் 234 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். பி400 பெட்ரோல் வேரியண்ட் அதிகபட்சமாக 400 எச்பி 550 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5.5 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 242 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம். 4.4 லிட்டர் வி8 இன்ஜின் அதிகபட்சமாக 530 எச்பி பவரையும் 750 என்எம் படார்க்கையும் வெளிப்படுத்தும். இந்தியாவிலேயே அசெம்ப்ளிங் செய்து இந்த காரை சந்தைப்படுத்துகிறது இந்த நிறுவனம். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.1.6 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement


