மின்னஞ்சல் மூலம் நடிகை ரம்யா கிருஷ்ணன், பாடகி சின்மயி வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல்
சென்னை: தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேற்று நள்ளிரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் அமைச்சர் சேகர்பாபு வீடு, நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் சின்மயி வீடுகள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன், பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி வீடுகளில் வெடி குண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பாதுகாப்பு பிரிவு போலீசார் அமைச்சர் சேகர்பாபு வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் பாடகி சின்மயி வீடுகள் மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன், பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி வீடுகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடி குண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செயத் மின்னஞ்சல் முகவரியை வைத்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.