Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ராமர் கோயில் அறக்கட்டளை முதல் சிஇஓ ஜிதேந்திர மிஸ்ரா

அயோத்தி: நன்கொடை திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் சிஇஓவாக ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் நன்கொடையில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டனர். கோயிலை நிர்வகிக்கும் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சம்பத் ராய் விலகினார். இந்நிலையில், அறக்கட்டளையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை (சிஇஓ) நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இப்பதவிக்காக 5,585 விண்ணப்பங்கள் குவிந்தன.

அதில், ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா, ராம ஜென்மபூமி வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் மதன் மோகன் பாண்டே மற்றும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் நிர்மலா யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் அறக்கட்டளையின் முதல் சிஇஓவாக ஜிதேந்திர மிஸ்ரா நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 30ம் தேதி விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற இவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது மேற்கு வான்படை பிரிவு தளபதியாக இருந்தவர். சர்வோத்தம் யூத் சேவா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இதுதவிர, நன்கொடை திருட்டு வெளிச்சத்திற்கு வந்த போது அறக்கட்டளையின் பொருளாளராக இருந்த கோவிந்த் தேவ் கிரி புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.