Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று (நவம்பர் 1) அதிகாலை, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களின் படகுடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகளும் தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவ குடும்பத்தினரிடையே பெரும் கவலையும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.