ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் கடும் கோஷ்டி மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் முன்னாள் மாவட்டச் செயலாளர் கண் இளங்கோ, மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா, மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் தீன், நம்புகுமார், மாநில மாணவர் பாசறை செயலாளர்கள் சங்கீதா, பாலு, மாநில மகளிர் பாசறை செயலாளர் ஜெயா, மாநில வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் செல்வம் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர்.
இவர்கள் மேதகு நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர். இதற்கான கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக கண் இளங்கோ, பொதுச்செயலாளராக மாரியம்மாள், பொருளாளராக காதர், செய்தித் தொடர்பாளராக நியூமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட நாதக உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் கூண்டோடு விலகி புதிய கட்சி துவங்கிய சம்பவம் சீமானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


