Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ராமநாதபுரம் - முன் அனுமதியின்றி 5 பேருக்கு மேல் கூட 2 மாதங்களுக்கு தடை.!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முன் அனுமதியின்றி 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட 2 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வரும் 5-ஆம் தேதி முதல் இரண்டு மாதத்திற்கு அனுமதியின்றி 5-க்கும் மேற்பட்டோர் கூடுதல், பொதுக்கூட்டம், ஊர்வலங்களுக்கு காவல்துறை தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழாவும், வரும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதை அடுத்தே அந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் 163 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமநாதபுரம் காவல்துறையானது, மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவோ அல்லது 5-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடவோ அனுமதியில்லை என்று அறிவித்து உள்ளது. இமானுவேல் சேகரன் குருபூஜை அவரது பிறந்த நாள் மற்றும் கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்வுகளை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் BNSS பிரிவு 163 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.