போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த எல்.முருகன் சமீபத்தில் தனது ஒன்றிய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு எம்பி பதவியிலிருந்தும் விலகினார். இதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடத்தபட உள்ளது. இதில், பாஜ வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று ஹர்தீப் சிங் பூரியை எதிர்த்து போபாலைச் சேர்ந்த ராஜ்குமார் லோஹானி என்பவர் சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ளார்.
மொபைல் உதிரிபாகங்கள் விற்கும் கடை நடத்தி வரும் 68 வயதான லோஹானி போபால் ஓல்டு சிட்டி கோரா நக்காஸ் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேருடன் வந்து லோஹானி மனுதாக்கல் செய்தார். அமெரிக்காவில் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஹர்தீப் சிங் பூரி மபியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்பதற்காக லோஹானியை ஆதரிப்பதாக காங்கிரஸ் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


