2026ம் ஆண்டிற்கான ராஜஸ்தானி–தமிழ் சேவா விருதுகள்: டிச.5 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: 2026ம் ஆண்டிற்கான ராஜஸ்தானி–தமிழ் சேவா விருதுக்கு டிச.5 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு, அதன் மதிப்புமிக்க ‘ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2026’ இன் 2வது பதிப்பை பெருமையுடன் அறிவிக்கிறது, இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக தனித்துவமான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் ஒரு முயற்சியாகும். இதுகுறித்து சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு தலைவர் ஸ்ரீ நரேந்திர ஸ்ரீஸ்ரீமால் கூறியதாவது "வேளாண்மை - கிராமப்புற மேம்பாடு, கலை - கலாச்சாரம், கல்வி - சுகாதாரம், தொழில்முனைவு - தொழில், சுற்றுச்சூழல்- நிலைத்தன்மை, ஊடகம் - தொடர்பு, பொது சேவை - நிர்வாகம், மற்றும் சமூக நலன் ஆகிய எட்டு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
ஒவ்வொரு விருதும் ₹2,00,000 ரொக்கப் பரிசையும், ஒரு கோப்பை மற்றும் பாராட்டுப் பத்திரமும் கொண்டுள்ளது." விவரங்கள் www.rajasthanitamil.org என்ற இணையதளத்தில் நவம்பர் 12 முதல் டிசம்பர் 5, 2025 வரை விண்ணப்பிக்கலாம். சாதி, மதம் அல்லது பின்னணியைப் பாகுபாடு இல்லாமல் , பொது மற்றும் தனியார் அல்லது தன்னார்வத் துறைகளைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் தங்கள் சேவை, பணிப் பகுதி மற்றும் துணை ஆவணங்களின் விவரங்களை இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட அனைத்துப் பதிவுகளும், விருதுகளின் தாக்கம், நேர்மை மற்றும் அவற்றின் நோக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான குறும்பட்டியல் குழுவால் கவனமாக மதிப்பீடு செய்யப்படும்.
பின்னர் இறுதித் தேர்வுக்காக நடுவர் மன்றத்தின் முன் பட்டியலிடப்படும்.ராஜஸ்தானி-தமிழ் சேவா விருதுகள் 2026 பிப்ரவரி 1, 2026 அன்று சென்னையில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட விருது பெறுபவர்களின் விவரங்கள் www.rajasthanitamil.org என்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். இந்த சந்திப்பில் அஜித் சோர்டியா, விருதுகள் தலைவர், தினேஷ் கோத்தாரி, பொதுச் செயலாளர், சிஏ அனில் கிச்சா, ஒருங்கிணைப்பாளர் மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.