விருதுநகர்: ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ராஜபாளையம் அருகே தேவதானத்தில் கோயிலில் பணியில் இருந்த இரவு நேர காவலாளிகள் இருவர் வெட்டி கொலைசெய்யப்பட்டனர். இரட்டை கொலையில் தொடர்புடைய சேத்தூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவரை போலீசார் பிடிக்க சென்ற போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நாகராஜை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
+
Advertisement
