Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் யோஷிதா ஊழல் குற்றச்சாட்டில் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் 2வது மகன் யோஷிதா ராஜபக்சே சொத்து வாங்கிய வழக்கில் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரின் போது அதிபராக பதவி வகித்தவர் மகிந்தா ராஜபக்சே. இலங்கையில் ராஜபக்சே குடும்பம் கடும் ஆதிக்கம் செலுத்தியது. மகிந்தாவின் மூத்த சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் அதிபராக இருந்துள்ளார். மகிந்தா ராஜபக்சே அதிபராகவும் பிரதமராகவும் பதவி வகித்தவர். மகிந்தாவுக்கு 3வது மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நமல் ராஜபக்சே தற்போது எம்பியாக உள்ளார். 2வது மகன் யோஷிதா ராஜபக்சே முன்னாள் கடற்படை வீரராவர்.

ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் அவர்களின் குடும்பம் பல்வேறு ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சியை தொடர்ந்து மக்கள் போராட்டம் காரணமாக கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியலிருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பரில் புதிய அதிபராக பதவியேற்ற அனுரகுமார திசநாயக, 2005 முதல் 2015 வரை நடந்த ராஜபக்சே குடும்பத்தின் மீதான ஊழல்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்திருந்தார். அதன்படி, 2015க்கு முன்பாக ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் சொத்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக மகிந்தா ராஜபக்சேவின் 2வது மகன் யோஷிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், யோஷிதா ராஜபக்சேவை அவரது சொந்த ஊரான பெலியட்டாவில் வைத்து சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக இதே வழக்கு தொடர்பாக, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்தாவின் மூத்த மகன் நமல் ராஜபக்சேவிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மகிந்தா ராஜபக்சே தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில் அவரது 2வது மகன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.