Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sports Person (Sports Quota-2024-25)

காலியிடங்கள்: 38.

விளையாட்டுப் பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:

அதலெடிக்ஸ்-4, பேட்மிண்டன்-3, கூடைப்பந்து-1, நீச்சல்-1, பளு தூக்குதல்- 5, கிரிக்கெட்-4, கோகோ-3, டென்னிஸ்-3, குத்துச்சண்டை-3, டேபிள் டென்னிஸ்- 2, ஹாக்கி-5, மல்யுத்தம்-1, கால்பந்து-2, கோல்ப்-1.

வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 18 முதல் 25க்குள்.

சம்பளம்: ரூ.5,200-20,200.

தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டு்ப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்த பட்சம் மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய விளையாட்டுத் தகுதிகள் பற்றிய கூடுதல் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கடைசி 2 வருட விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கிடப்படும். இதற்கான நேர்முகத் தேர்வு மார்ச் 17ல் நடைபெறும்.தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ரயில்வேயில் கிளார்க்காக பணியமர்த்தப்படுவர்.

www.rrcnr.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.03.2025.