Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

ரயில்வே சுற்றுலாத்துறையில் ‘கேட்டரிங்’ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பணி: ஹாஸ்பிட்டல் மானிட்டர் (ஐஆர்சிடிசி/மேற்கு மண்டலம்). மொத்த காலியிடங்கள்: 49.

வயது: 21.01.2026 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.30 ஆயிரம் மற்றும் தினசரி படி ரூ.350 மற்றும் ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ்.

தகுதி: ஹாஸ்பிட்டலிட்டி மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட்/குலினரி ஆர்ட்ஸ்/கேட்டரிங் சயின்ஸ்/டூரிஸம் ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பிஎஸ்சி/பிபிஏ/எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். 2024ம் ஆண்டிற்கு முன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்க வேண்டாம்.

www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் ஆகியவைகளை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், முகவரிகள் தேதி வாரியாக இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 17.02.2026 முதல் 05.03.2026 வரை.