ரயில்வே பணிக்கான தேர்வு மையத்தை தெலுங்கானாவில் அமைத்தது தொடர்பாக ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்
02:48 PM Mar 16, 2025 IST
Share
Advertisement
சென்னை: ரயில்வே பணிக்கான தேர்வு மையத்தை தெலுங்கானாவில் அமைத்தது தொடர்பாக ரயில்வே தேர்வு வாரியம் விளக்கமளித்துள்ளது. முந்தைய CBT2 தேர்வுகளை நடத்தும்போது இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. இடஒதுக்கீடு பெற்ற தேர்வர்களுக்கு இலவச பயண ரயில் பாஸ் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உதவி லோகோபைலட் பணியிடங்களுக்கு 2-ம் நிலை தேர்வு மார் 19-ல் நடைபெறுகிறது.