Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரயில்வேயில் 312 இடங்கள்

1. சீனியர் பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர்: 15 இடங்கள். வயது: 18 லிருந்து 33க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.35,400. தகுதி: ஏதொவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பப்ளிக் ரிலேஷன்ஸ்/ மாஸ் கம்யூனிகேசன்/அட்வர்டைசிங்/ஜர்னலிசம் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. லேப் அசிஸ்டென்ட் கிரேடு-3: (கெமிஸ்ட் மற்றும் மெட்டலர்ஜிஸ்ட்): 39 இடங்கள். வயது: 18 லிருந்து 30க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. சீப் லா அசிஸ்டென்ட்: 22 இடங்கள். வயது: 18 லிருந்து 40க்குள். சம்பளம்: ரூ.19,900. தகுதி: சட்ட பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (இந்தி): 202 இடங்கள். வயது: 18 லிருந்து 33க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. ஸ்டாப் மற்றும் வெல்பர் இன்ஸ்பெக்டர்: 24 இடங்கள். வயது: 18 லிருந்து 38க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் லேபர்/சோஷியல் வெல்பர்-ல் டிப்ளமோ அல்லது பெர்சனல் மேனேஜ்மென்ட்/ ஹியூமன் ரீசோர்ஸ் மேனேஜ்மென்ட்டில் முதுநிலை டிப்ளமோ அல்லது எல்எல்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பப்ளிக் புராசிகியூட்டர்: 7 இடங்கள். வயது: 18 லிருந்து 38க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.44,900. தகுதி: எல்எல்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. சயின்டிபிக் அசிஸ்டென்ட் (பயிற்சி): 2 இடங்கள். வயது: 18 லிருந்து 35க்குள். சம்பளம்: ரூ.35,400. தகுதி: உளவியல் பாடத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

8. சயின்டிபிக் சூபர்வைசர்/எர்கோனோமிக்ஸ்: 1 இடம். வயது: 18 லிருந்து 35க்குள். சம்பளம்: ரூ.44,900. தகுதி: சைக்காலஜி/ பிசியாலஜி பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் சிபிடி தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

https://www.rrbapply.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 29.01.2026.