பணி: ஸ்போர்ட்ஸ் பெர்சன் (ஸ்போர்ட்ஸ் கோட்டா: 2025-26). மொத்த காலியிடங்கள்: 54.
விளையாட்டு பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:
அதலெடிக்ஸ்- 7, சைக்கிளிங்-3, செஸ்-2, கிரிக்கெட்-4, பேட்மிண்டன்-2, வில்வித்தை-3, பளு தூக்குதல்-4, ஹாக்கி-5, துப்பாக்கி சுடுதல்-1, நீச்சல்-2, வாட்டர் போலோ-4, வாலிபால்-7, கோகோ-4, டைவிங்-1, கால்பந்து-3, டென்னிஸ்-1, கோல்ப்-1.
வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200.
விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதி மற்றும் விளையாட்டு சாதனைகள், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய விளையாட்டு தகுதிகள் பற்றிய கூடுதல் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் டைப்பிங் படித்தவர்களுக்கு கூடுதல் தர ஊதியம் வழங்கப்படும்.
www.rrcser.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கான கட்டணம் ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.02.2026.



