பயிற்சி: டிரேடு அப்ரன்டிஸ். மொத்த காலியிடங்கள்: 2801.
டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்: (ஏசி மெக்கானிக்- 251, கார்பென்டர்-22, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்-181, டீசல் மெக்கானிக்-105, எலக்ட்ரீசியன்-1258, எலக்ட்ரானிக் மெக்கானிக்- 88, பிட்டர்-539, இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்- 33, மிஷினிஸ்ட்- 54, எம்எம்டிஎம்-24, மோட்டார் மெக்கானிக்-12, பெயின்டர்-32, வெல்டர்-202.)
வயது: 11.04.2026 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிவிடி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் விவரம் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள்/ திருநங்கைகளுக்கு கட்டணம் கிடையாது.
எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வே விதிமுறைப்படி வயது வரம்பு சலுகை அளிக்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
www.scr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.04.2026.


