தண்டவாளம் அருகே மரம் விழுந்து தீ பிடித்தது குமரி பயணிகள் ரயில் தப்பியது
Advertisement
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மரம் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தண்டவாளம் அருகே மரம் எரிந்து கொண்டிருந்த 100 மீட்டர் அருகே இந்த ரயில் நிறுத்தப்பட்டது. தக்க சமயத்தில் நிறுத்தப்பட்டதால் கன்னியாகுமரி-புனலூர் ரயில் மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பியது. உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ரயில்வே ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீயை முழுமையாக அணைத்த பின்னரே மின்கம்பிகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. பல மணி நேரத்திற்கு பின்னர் ஒரு பாதையில் மட்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
Advertisement