Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ராகுல் எழுப்பும் கேள்விகளை கண்டு ஒன்றிய பாஜ அரசு ஏன் அஞ்சுகிறது? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பா.ஜ. அரசு ஏன் அஞ்சுகிறது? என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பா.ஜ. அரசு ஏன் அஞ்சுகிறது? அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும்.எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக அவர்களது இடைநீக்கத்தைத் திரும்பப்பெற்று, முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் அவையில் பேசுவதற்கான ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.