Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திட்டமிட்டு பேசவிடாமல் தடுத்தனர்; இது நமது ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்

டெல்லி: மக்களவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்று நேற்று உரையாற்றினா். இன்றும் அந்த விவாதம் தொடர்ந்தது. அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. மக்களவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில்; மக்களவையில் நான் பேசுவதை தடுப்பது ஒரு திட்டமிட்ட முயற்சி. என்னை பேசவிடாமல் தடுப்பது மரபை மீறுவதாகும்; இது தீவிர கவலையை ஏற்படுத்தி உள்ளது.

குடியரசு தலைவர் உரையின் ஒரு முக்கிய பகுதி தேசிய பாதுகாப்பு; அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பது முன்னெப்போதும் இல்லாத சூழலுக்கு வழிவகுத்துள்ளது. அரசின் தூண்டுதலால் குடியரசுத் தலைவர் உரை விவாதத்தில் பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் குடியரசுத் தலைவரின் ரயில் பேசுவதைத் தடுக்க சபாநாயகர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இது நமது ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை, இதற்கு எதிராக எனது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.