எனது ரேஸ் ஆசைக்கு பெற்றோர் சொன்ன அட்வைஸ்: அஜித் குமார் உருக்கமான பேட்டி
தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அவர், அடிக்கடி பேட்டி கொடுக்கிறார். சமீபத்தில் அஜித் குமார் அளித்த பேட்டி வருமாறு:
நான் முதன்முதலில் பைக் ரேஸிங்கை தொடங்கினேன். ஏனெனில், அது மிகவும் மலிவானது. எனக்கு ஆதரவாக பெற்றோர்கள் இருந்தனர். அந்தவகையில் நான் ஒரு பாக்கியசாலி. ஆனால் என் தந்தை மிகவும் நேர்மையாக, ‘அஜித், இது அதிக செலவை உண்டாக்கும் விளையாட்டு.
எங்களால் உனக்கு ஆதரவளிக்க முடியாமல் போகலாம். ஆனால், நீ உன் ஸ்பான்சர்களை கண்டுபிடித்து, அதற்கு ஒரு வழி கண்டால் முன்னேறு’ என்று சொன்னார். நான் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு எனது பெற்றோர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தனர். அவர்கள் சொல்லும்போது, ‘படித்து முடித்து ஒரு பட்டம் வாங்க வேண்டும். இல்லை என்றால், ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும். நேரத்தை மட்டும் வீணடிக்க கூடாது’ என்றனர். அப்போதுதான் நான் வேலை செய்வதை தேர்ந்தெடுத்தேன்.இவ்வாறு அஜித் குமார் கூறியுள்ளார்.