* ஆணிகளை சுவற்றில் அடிக்கும் முன்பு சிறிது பரப்பில் மெழுகை தடவி பின் அடித்தால் சுலபமாக இறங்கும்.
* முகம் பார்க்கும் கண்ணாடி பளபளவென மின்ன தண்ணீரில் சில சொட்டுக்கள் அம்மோனியாவை விட்டுத் துடைக்கவும்.
* கண்ணாடிகளை ஒரு துண்டு உருளைக்கிழங்கை கொண்டு நன்கு தேய்த்து துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று இருக்கும்.
* குழம்பு தண்ணீரை தெளித்தால் ஈக்கள் வராது.
* டீ போட்ட பின் வேஸ்டான சக்கையை வீட்டில் உள்ள பூ மற்றும் காய்கறி செடிகளுக்கு போட்டால் செழித்து வளரும்.
* வெள்ளி பாத்திரங்கள் அலம்பும் தண்ணீரில் சிறிது பாலை சேர்த்தால் வெள்ளிப்பாத்திரங்கள் பளபளக்கும்.
* குளியல் சோப்புகளின் நடுவில் குளிர்பான பாட்டில் மூடியை நன்கு அழுத்தி பொருத்திவிட்டால் சோப்பு கட்டி நழுவி தரையில் விழுவது தவிர்க்கப்படும்.
* பாத்திரங்கள் அலம்பும் நீரில் அவ்வப்போது வினிகரை கலந்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.
* டிஷ்யூ பேப்பர் மற்றும் செய்தித்தாளைக் கொண்டு கண்ணாடிகளைத் துடைத்தால் பளபளவென மின்னும்.
* குளியலறை வழுக்கினால் டிக்காஷன் போட்டு பில்டரில் மிஞ்சியுள்ள காப்பி தூளைக் கொண்டு தரையை தேய்த்தால் தரை வழுக்காது.
* ஐஸ் கட்டி தட்டுகளை ஒருபோதும் சுடுநீரில் அலசக்கூடாது.
* வீட்டில் உள்ள காலாவதியான ஆயின்மெண்டுகளை தூக்கி எறியாமல் ஷூ பாலிசாக பயன் படுத்தலாம்.
* முகத்திற்கு போடும் பவுடர் காலாவதியாகி விட்டால் அதை தூக்கி எறியாமல் கேரம்போர்டு பவுடராக பயன் படுத்தலாம்.
- எஸ். சடையப்பன்.
